பனை மரத்தை வெட்ட இனி அனுமதி கட்டாயம்…. தமிழக அரசு அரசாணை வெளியீடு!
தமிழ்நாட்டின் மாநில மரம் பனை மரம். இவை சமீபகாலமாக அருகி வருவதால் அதனை காக்க தமிழக அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் இனி பனை மரங்களை வெட்டுவதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கடிதம் கட்டாயம் பெற வேண்டும் என தமிழக அரசு சற்று முன் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பனை மரத்தை வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பனை மரங்களை வெட்டுவதற்கு முன்பாக உழவர் என்ற செயலியில் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். அதேபோன்று வெட்டப்பட்ட பனை மரங்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்லவும் அனுமதி கட்டாயம் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
