ஒகேனக்கலில் பரிசல் இயக்க அனுமதி... சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!
கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையின் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியுள்ளன. கர்நாடக அணைகளின் பாதுகாப்புக் கருதி காவிரி ஆற்றில் சுமார் ஒரு லட்சம் வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்து வருவதால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவுகளும் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து சரிய தொடங்கியுள்ளது. வினாடிக்கு 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றைய நிலவரப்படி வினாடிக்கு 20,000 கன அடியாக குறைந்தது. தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து நீர்வரத்து சரிந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு 5 நாள்களுக்குப் பிறகு கலெக்டர் அனுமதி அளித்துள்ளார். இருப்பினும் அருவிகளில் குளிப்பதற்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. காவிரி கரையோர பகுதிகளில் வருவாய் துறையினர், காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரியின் அளவு குறைக்கப்பட்டு இருப்பதால் தொடர்ந்து காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து குறைந்து வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
