அஜித்குமார் லாக்கப் டெத்... தவெக போராட்டத்துக்கு அனுமதி!
அஜித் குமார் லாக்கப் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் சமீபத்தில் அடித்துக் கொல்லப்பட்டாா்.இந்த விவகாரத்தில் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு மாற்றக் கோரியும் தவெக தரப்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அன்றைய நாளில் அந்த இடம் வேறு காரணத்துக்காக பயன்படுத்தப்பட உள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டது. ஆகையால், புதன்கிழமை ஜூலை 3ம் தேதி நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.இந்தப் போராட்டத்துக்கு காவல்துறையினரிடம் தவெகவினர் அனுமதி கோரிய நிலையில் 2 முறை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னையில் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறையினரை அனுமதி அளிக்க உத்தரவு பிறப்பிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக தரப்பில் மனு அளித்தனர். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க முறையிட்ட நிலையில், நீதிபதி வேல்முருகன் மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று ஜூலை 7ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், தவெக போராட்டத்துக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து, காவல் துறையும் தவெகவினரின் போராட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. சென்னை சிவானந்தா சாலையில் போராட்டத்தை நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
