காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அனுமதி... அமைச்சர் பொன்முடி தகவல்!

 
பொன்முடி

பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என சட்டசபையில் வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

காட்டுப்பன்றி
இது குறித்து அமைச்சர் பொன்முடி சட்டசபையில் பேசுகையில், “பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. காப்புக்காடுகளில் இருந்து 1 முதல் 3 கி.மீ. தொலைவுக்குள் காட்டுப்பன்றி வந்தால் சுட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

மருத்துவ படிப்புக்கு மாநில அளவில் தேர்வு:  மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி

விவசாயிகள் பன்றிகளை துப்பாக்கியால் சுடுவது குறித்து வருங்காலங்களில் பரிசீலிக்கப்படும். வனவிலங்குகள் எவை எவை என அறிவிப்பது மத்திய அரசு தான். வன விலங்கு பட்டியலில் காட்டுப் பன்றி உள்ளது. அதை நீக்குவது எளிதல்ல. மத்திய அரசின் வனவிலங்கு அறிவிப்பு பட்டியலில் இருந்து காட்டு பன்றியை விலக்குவது சாதாரணமானது அல்ல" என்று தெரிவித்தார்.

இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web