விடாமுயற்சி... இணையதளம் தெறிக்குது... AK 62 மாஸ் அப்டேட்... அஜித் ரசிகர்களுக்கு டபுள் டிரீட்!

 
அஜித்

தன்னை செதுக்குகிறவன் எவனோ அவனே மேலே வருவான்... அப்படி ஒவ்வொன்றாக தன்னையும், தன் வாழ்க்கையையும் பார்த்து பார்த்து செதுக்கி கொண்டு வளர்ந்தவர் நடிகர் அஜித். இந்நிலையில், அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் ‘ஏகே 62’ படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் குறித்த தகவல் கசிந்துள்ளது. படத்திற்கு ‘விடாமுயற்சி’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இணையதளங்களில் ரசிகர்கள் ‘விடாமுயற்சி’ தலைப்பைக் கொண்டாடி வருகின்றனர்.

அஜித்குமார் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான ‘துணிவு’ நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூல் ரீதியாக 260 கோடிக்கும் மேல் அள்ளி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து நடிகர் அஜித்தின் ஏகே 62 படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. 

படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் அப்படத்தின் கதை பிடிக்காததால் அதில் இருந்து விக்னேஷ் சிவனை அதிரடியாக நீக்கியது லைகா நிறுவனம். இதையடுத்து விக்னேஷ் சிவனுக்கு பதிலாக இயக்குனர் மகிழ் திருமேனி அப்படத்தை இயக்க ஒப்பந்தமானார். மகிழ் திருமேனி கமிட்டாகி 2 மாதங்களுக்கு மேலாகியும், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.

AK 62

வலிமை அப்டேட்டுக்கு பின்னர் அஜித் ரசிகர்கள் நீண்ட நாள் காத்திருந்த அப்டேட் என்றால் அது ஏகே 62 படத்தின் அப்டேட் தான். ரசிகர்களின் பொறுமையை சோதிக்க விரும்பாத லைகா நிறுவனம், ஒரு வழியாக ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட தயாராகி விட்டது. ரசிகர் இவ்வளவு நாட்கள் அமைதியாக காத்திருந்ததற்கு பலனாக ஒன்றல்ல அடுத்தடுத்து இரண்டு அப்டேட்டுகள் வெளியாக உள்ளன. இதனால் அஜித் ரசிகர்களுக்கு இது டபுள் ட்ரீட்டாக அமைய உள்ளது.

நாளை நடிகர் அஜித் தனது 52வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக தான் ஏகே 62 படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட இருக்கிறது. அதன்படி இன்று மாலை 6 மணி அல்லது நள்ளிரவு 12 மணிக்கு ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவதோடு, அப்படத்தின் டைட்டிலையும் அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாம் படக்குழு. இதற்கு ‘விடா முயற்சி’ என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

AK62

ஏகே 62 படத்தின் டைட்டிலை போஸ்டர் மூலம் வெளியிட உள்ளார்களா அல்லது லியோ பட பாணியில் டீசர் மூலம் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களா என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை. ஆனால் அப்படத்தின் டைட்டில் வெளியாவது மட்டும் உறுதி. இதையடுத்து மே மாதத்தில் ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் மகிழ் திருமேனி, இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளும் ஒருபக்கம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web