துாத்துக்குடி மக்களவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு!

 
மோடிக்கு கடும் கண்டனம்! கனிமொழி எம்.பி ஆவேசம் !

துாத்துக்குடி மக்களவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையர்கள் 8 வாரத்தில் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

துாத்துக்குடி மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பொன்குமரன் என்பவர் போட்டியிட்டார். இவர், தேர்தல் பிரசாரத்தின் போது முக்கிய அரசியல் கட்சிகளின் விதிமீறல்கள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரிடம் அவ்வப்போது புகார் மனு அளித்தார். இது சம்பந்தமான புகார்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் அனுப்பினார். அனைத்து வேட்பாளர்களும் சமம். ஆனால் துாத்துக்குடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்களை தேர்தல் அதிகாரிகள் அவ்வாறு நடத்தவில்லை. 

முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களின் சுவர் விளம்பரங்கள் பல இடங்களில் அழிக்கப்படாமல் அப்படியே இருந்தது. பல்வேறு இடங்களில் கொடிக்கம்பங்கள் மறைக்கப்படவில்லை. தேர்தல் நடைமுறை மற்றும் விதிமுறைப்படி வேட்பாளர்கள் பெயர்கள், சின்னங்களை மக்கள் அறியும் வகையில் மாவட்ட நிர்வாகம் தினசரி நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் வாக்காளர்களுக்கு யார் வேட்பாளராக நிற்கிறார் என்பது தெரியும். ஆனால் மாவட்ட தேர்தல் அதிகாரி அவ்வாறு விளம்பரம் செய்யவில்லை.

சட்டப்பேரவை   இடைத்  தேர்தல்

துாத்துக்குடி தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் தேர்தல் அன்று பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க முடியவில்லை. இது போன்ற நிலை கூடாது என்றும் வேட்பாளர் பொன்குமரன் ஆணையர் தேர்தல் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தார். ஆனால் புகாரின் மீது பதில் அளிக்காமல், நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை (பொ) மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த புகார் மனு மீது டெல்லி மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர்கள் விசாரித்து 8 வாரங்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுகுறித்து சுயேட்சை வேட்பாளர் பொன்குமரன் கூறுகையில், இதில் நீதி கிடைக்காவிட்டால், உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளதாக தெரிவித்தார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web