கோவில் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... அதிர வைக்கும் வாக்குமூலம்...!!

சென்னையில் ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு முற்றிலும் அடங்குவதற்குள் சென்னை கொத்தவால்சாவடி கோவிந்தப்ப நாயக்கர் தெரு பகுதியில் அமைந்துள்ளது வீரபத்திர சுவாமி கோவிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் குண்டை அதே பகுதியில் வசித்து வரும் 38 வயதான முரளி கிருஷ்ணன் வீசியுள்ளார்.
இவர் மது போதையில் கையில் பெட்ரோல் குண்டோடு கோயில் முன் தகராறில் ஈடுபட்டார். கோயில் உள்ளே இருந்த பூசாரி அலறி அடித்து வெளியே ஓடி வந்து தடுத்து பார்த்தார். கேட்காததால் பூசாரி கோயிலை விட்டு வெளியே ஓடி விட்டார். இவர் ஓடிய அடுத்த ஒரு சில நிமிடங்களில் கோயில் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். கோயிலில் வெளியே விழுந்த பெட்ரோல் குண்டு வெடித்துள்ளது.
கோவிலில் பக்தர்கள் , பூசாரி உட்பட யாரும் இல்லததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டை வீசிவிட்டு குடிபோதையில் முரளி கிருஷ்ணன் உளறிக் கொண்டிருந்தார். அதில் கடந்த 4 ஆண்டுகளாக உன்னை தானே கும்பிடறேன். எனக்கு எதுவுமே நீ திருப்பி தரல.. அதான் பெட்ரோல் குண்டு வீசிட்டேன் எனக் கூறிக் கொண்டிருந்தார். இதனையடுத்து கோவிலின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து முரளிகிருஷ்ணணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!