உஷார்... ரூ.1010 கோடி மோசடி... தமிழகத்தில் அதிகரிக்கும் சைபர் க்ரைம்!
கடந்த 7 மாதங்களில் தமிழ்நாட்டில் சைபர் குற்றங்களால் சுமார் ரூ.1010 கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதே நேரத்தில் இந்தக் காலகட்டத்தில், தேசிய சைபர் குற்றப் புகார் மையத்தில் மொத்தம் 88,479 புகார்கள் பதிவாகியுள்ளன.இந்தப் புகார்கள், ஆன்லைன் மோசடி, ஃபிஷிங், KYC மோசடி, மற்றும் டிஜிட்டல் கைது போன்ற பல்வேறு சைபர் குற்றங்களால் ஏற்பட்டவை. சைபர் கிரைம் பிரிவு, இந்த இழப்புகளை கட்டுப்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு, மோசடியில் பயன்படுத்தப்பட்ட ரூ.314 கோடி முடக்கப்பட்டுள்ளது.

இதில், ரூ.62 கோடி பணம் மீட்கப்பட்டு, பாதிக்கப்பட்ட புகார்தாரர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.சைபர் க்ரைம் போலீஸ், உடனடியாக புகார் அளிப்பதன் மூலம் மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சைபர் மோசடிகளைப் புகார் அளிக்க, தேசிய சைபர் குற்ற தடுப்பு இணையதளமான www.cybercrime.gov.in அல்லது 1930 என்ற ஹெல்ப்லைனை பயன்படுத்தலாம். தாமதமான புகார்கள், பணத்தை மீட்பதற்கான வாய்ப்புகளை குறைக்கும் எனறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தப் புள்ளிவிவரங்கள், தமிழ்நாட்டில் சைபர் குற்றங்களின் அதிகரிப்பையும், பொது விழிப்புணர்வு மற்றும் உடனடி நடவடிக்கையின் அவசியத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு, மாநிலம் முழுவதும் உள்ள 54 சைபர் கிரைம் காவல் நிலையங்கள் மற்றும் மாநில சைபர் கட்டளை மையம் மூலம் இந்த மோசடிகளை எதிர்கொள்ள முயற்சித்து வருகிறது.அத்துடன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
