ஃபீனிக்ஸ் சூப்பர் நண்பா... சூர்யாவை பாராட்டி தள்ளிய நடிகர் விஜய் !

 
சூர்யா விஜய்


 
 நடிகர்  விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் ஃபீனிக்ஸ்  திரைப்படத்தின் சிறப்பு காட்சியை நடிகர் விஜய்  பார்த்து,  பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்தக் காட்சியில், சூர்யாவின் நடிப்பையும் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளையும் விஜய்  புகழ்ந்தார். “முதல் படத்திலே இப்படியா? சூப்பர் நண்பா!” என்று சூர்யாவை வாழ்த்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா

அனல் அரசு இயக்கத்தில் உருவான இந்த படம்   சூர்யாவின் ஆக்‌ஷன் அவதாரத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விஜய்யின் இந்தப் பாராட்டு, படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே உருவாக்கியுள்ளது சமூக வலைதளங்களில் ஏற்கனவே  சூர்யாவை ‘கோலிவுட் ப்ரூஸ் லீ’ என  வெகுவாகப் புகழ்ந்து வருகின்றனர்.

சூர்யா

‘ஃபீனிக்ஸ்’ படத்தின் வெளியீட்டிற்கு முன்பே, அதன் விளம்பர நிகழ்ச்சிகளும், டிரெய்லரும் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தன. விஜய் சேதுபதி, தனது மகனின் முதல் படம் குறித்து பெருமையும் மகிழ்ச்சியும் அறிவித்திருந்தார்.  
விஜய்யின் வாழ்த்து, படத்தின் வெற்றிக்கு மேலும் உற்சாகம் அளித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து சூர்யா சேதுபதி தனது சமூக வலைத்தள பக்கங்களில் ” படத்தை பார்த்துவிட்டு விஜய் சார் பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் மிகவும் ரசித்த ஒருவரிடம் இருந்து எனக்கு கிடைத்த பாராட்டை பற்றி உண்மையில் என்ன சொல்வது என்று தெரியவில்லை. உங்களின் கனிவான வார்த்தைகளும், அணைப்பும், எல்லாவற்றையும் உணர்த்தியது” எனவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?