முதல் திருமண நாள்... செம க்யூட்டா நயன்... மகன்களுடன் கொண்டாட்டம்!

 
நயன்தாரா

நடிகை நயன்தாரா,  இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமண ஆண்டு நிறைவு இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை நயன் தாரா தனது மகன்கள் உயிர் மற்றும் உலகத்துடன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.  2022 ஜூன் 9 ம் தேதி பெற்றோர்களின் சம்மதத்துடன்   பிரபலங்கள் முன்னிலையில்  நடைபெற்ற இவர்களுடைய திருமண நிகழ்வின் வீடியோ உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளனர்.  இன்னும் அந்த வீடியோ வெளியாகவில்லை. திருமணம் ஆனதை தொடர்ந்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வாடகை தாய் மூலம் 2 குழந்தைகளைப் பெற்று கொண்டனர்.  

 

முதல் குழந்தையின் பெயர் உயிர் ருத்ரோ நீல் , உலக் தெய்விக் எனப் பெயரிட்டுள்ளனர்.   இவர்களின் திருமணம் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.   இது குறித்து விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாவில் “  நேற்று தான் எங்களுக்கு திருமணம் ஆனது போல இருக்கிறது.

நயன்தாரா

ஆனால், திடீரென்று எனது நண்பர்கள் “ஹேப்பி ஃபர்ஸ்ட் இயர் மேரேஜ் ஆனிவர்சரி” என எனக்கு குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். “லவ் யூ தங்கமே” எல்லா அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும்   வாழ்க்கையைத் தொடங்குகிறோம். இன்னும் வெகுதூரம் போகவேண்டும் நம் வாழ்வில் உள்ள அனைத்து நல்ல மனிதர்களின் அனைத்து நல்லெண்ணத்துடனும், சர்வ வல்லமையுள்ள கடவுளின் ஏராளமான ஆசீர்வாதங்களுடனும் எங்கள் திருமணத்தின் 2வது ஆண்டை எங்கள் வாழ்வின் மிகப்பெரிய ஆசீர்வாதங்களுடன் கொண்டு வருவோம் எங்கள் குழந்தைகள் உயிர் & உலகம்” என பதிவிட்டுள்ளார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்