இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க... நவம்பர் 13ம் தேதி கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை!

 
கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை! மக்களே தேவையான ஏற்பாட்டை செய்துக்கோங்க!

தமிழகத்தில் தீபாவளி கொண்டாட்டங்கள் களைககட்ட துவங்கியுள்ள நிலையில், பலரும் சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டு வருகின்றனர். ரயிலில் டிக்கெட் கிடைக்காதவர்கள், சிறப்பு பேருந்துகள், பண்டிகை கால சிறப்பு ரயில்கள் என்று திட்டமிடத் துவங்கியுள்ளனர். தமிழக அரசு, தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கட்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவித்துள்ள நிலையில், சொந்த ஊருக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க துவங்கியுள்ளது.

வெங்காயம் காய்கறி கடை கோயம்பேடு சந்தை

சொந்த ஊருக்குச் சென்று திரும்புபவர்கள் இப்போதே திட்டமிட்டுக்கோங்க... சென்னை மொத்த காய்கறி மார்க்கெட்டான  கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 13ம் தேதி திங்கட்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்

இந்த விடுமுறையை மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்நாளில் மார்க்கெட்டில் உள்ள மொத்த மற்றும் சில்லறை காய்கறி , பூ , பழக்கடைகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web