பணபரிவர்த்தனையை திட்டமிட்டுக்கோங்க... ஜூலை மாதத்தில் 13 நாட்கள் வங்கி விடுமுறை!

உங்கள் வங்கி தொடர்பான பண பரிவர்த்தனைகளை முறையாக திட்டமிட்டுக்கோங்க. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. வங்கிகளின் விடுமுறை மற்றும் பணிபுரியும் நாட்கள் அனைத்தும் ரிசர்வ் வங்கி மூலம் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜூலை மாதத்துக்கான வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
ஜூலை மாதத்தில், வங்கி விடுமுறை நாட்களை கணக்கிட்டு சில முக்கியமான பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளலாம். அதன்படி ஜூலை மாதத்தில் மொத்தம் 13 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியல்
ஜூலை 3: வியாழக்கிழமை : கார்ச்சி பூஜை : திரிபுராவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை .
ஜூலை 5: சனிக்கிழமை : குரு ஹர்கோபிந்த் ஜியின் பிறந்தநாள் பஞ்சாபில் வங்கிகள் விடுமுறை
ஜூலை 6: ஞாயிற்றுக்கிழமை
ஜூலை 12: 2வது சனிக்கிழமை
ஜூலை 13: ஞாயிற்றுக்கிழமை
ஜூலை 14: திங்கட்கிழமை : பெஹ் டெங்க்லாம் விழா
ஜூலை 16: புதன்கிழமை : ஹரேலா பண்டிகை
ஜூலை 17: வியாழக்கிழமை : உ திரோட் சிங்கின் நினைவு தினம் : மேகாலயாவில் வங்கி விடுமுறை
ஜூலை 19: சனிக்கிழமை : கெர் பூஜை : திரிபுராவில் வங்கி விடுமுறை
ஜூலை 20: ஞாயிற்றுக்கிழமை
ஜூலை 26: 4 வது சனிக்கிழமை
ஜூலை 27: ஞாயிற்றுக்கிழமை
ஜூலை 29: செவ்வாய்கிழமை : போனாலு தெலுங்கானாவில் வங்கிகள் விடுமுறை
ஜூலை மாதத்தில் வங்கிப்பணிகளை இந்த விடுமுறையின் அடிப்படையில் திட்டமிட்டு கொள்ளலாம். மற்ற முக்கியமான வேலைகள் இருந்தால், காசோலையை டெபாசிட் செய்தல், கடன் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பித்தல் அல்லது பணம் எடுப்பது போன்றவை இருந்தால், முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களிலும் கூட ஆன்லைன் வங்கி, UPI மற்றும் ATM மற்றும் இணைய வங்கி வசதி தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!