நடுவானில் தீப்பிடித்து பற்றி எரிந்த விமானம்.. பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கியது..அதிர்ச்சி வீடியோ!

 
விமானம் தீ விபத்து

நடுவானில் விமானம்  பறந்து கொண்டிருந்த போது, பறவை மோதியதால் தீப்பிடித்து எரிந்த நிலையில், அவசர அவசரமாக தரையிறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று அமெரிக்காவின் கொலம்பஸ் நகரில் இருந்து பினிக்ஸ் நகரை நோக்கி நேற்று காலை புறப்பட்டது. விமானம் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே நடுவானில் விமானத்தின் என்ஜினில் இருந்து பயங்கர தீ பற்றியது. 

நடுவானில் விமானத்தின் என்ஜின் மீது பறவை மோதியதால் என்ஜினில் தீ பற்றியுள்ளது. என்ஜினில் தீ பற்றியதால் விமானத்தில் இருந்த பயணிகள் பதற்றமடைந்தனர். தீ பற்றியது குறித்து அறிந்த விமானி உடனடியாக விமானத்தை ஒஹியோ விமான நிலையத்திலேயே அவசர அவசரமாக தரையிறக்கினார்.


அப்போது விமான நிலையத்தில் தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனை தொடர்ந்து மாற்று விமானம் மூலம் பயணிகள் பினிக்ஸ் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

Ohio

நடுவானில் விமான என்ஜினில் தீ பற்றி எரிந்த நிகழ்வை தரையில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் விசாரணை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web