பகீர் வீடியோ... தரையிறங்கிய போது வெடித்து சிதறிய விமானம்... 42 பேர் உடல் சிதறி பலி!

 
கஜகஸ்தான்
 

 
கஜகஸ்தான் நாட்டில் விமானம் ஒன்று  72 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதில் 42 பேர்  உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  அஜர்பைஜான் ஏர்லைன்ஸூக்கு சொந்தமான அந்த விமானம், ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது. க்ரோஸ்னியில் நிலவி வரும் பனிமூட்டம் காரணமாக 3 இடங்களில் தரையிறங்க முடியாமல் விமானம் திருப்பிவிடப்பட்டது. இன்று  72 பேருடன் சென்றகொண்டிருந்த அஜர்பைஜான் ஏர்லைன்ஸின் Embraer E190AR  என்ற விமானம் கஜகஸ்தானின் அக்டோவில் தரையிறங்கும் போது, வெடித்துச் சிதறியது.

இதனை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளனர்.  மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில்  விமானத்தில் பயணம் செய்த 72 பேரில்  இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளதால் இன்னும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

கஜகஸ்தான்

இந்த சம்பவம் குறித்து அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் அதிகாரி  ” விபத்துக்குள்ளான Embraer E190AR விமானம், Baku-Grozny பாதைக்கு அருகே சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட போது விபத்து ஏற்பட்டது.  காலை 6:28 UTC (காலை 11:58), விமான நிலையத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஸ்பியன் கடல் கடற்கரைக்கு அருகில் விமான விபத்து ஏற்பட்டது. இந்த  விபத்திற்கான காரணம் பற்றிய விசாரணையும் நடந்து வருகிறது” எனவும் தெரிவித்துள்ளார்.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!