கள்ளச்சாராயத்திற்கு மெத்தனால் வழங்கிய ஆலை உரிமையாளர்கள் கைது!

 
மெத்தனால்


 
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்து  இதுவரை 58 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில்  இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளது. இதன் அடிப்படையில்  சிபிசிஐடி போலீசார்  15 பேரை கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி  முழுவதும் விஷ சாராய விற்பனையை கட்டுப்படுத்த சிறப்பு தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 

மெத்தனால்
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் சென்னை மாதவரத்தைச் சேர்ந்த பிரபல கெமிக்கல் ஆலையில் இருந்து மெத்தனால் விநியோகம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆலையின் உரிமையாளர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  விஷச்சாராய வழக்கில் ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், தற்போது மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!