சிக்கன் பிரியாணியில் பிளாஸ்டிக் கவர் ... அதிர்ச்சி!

 
சிக்கன் பிரியாணி


உணவில் கலப்படங்கள் அதிகரித்து சாப்பிடும் பொருளே விஷமாகி வருகிறது. உணவே மருந்தாக எடுத்துக்கொண்ட முன்னோர்கள் காலம் மாறி உணவை கண்டு அஞ்சும் காலமாகிவிட்டது. உணவு சமைப்பவர்களின் அலட்சிய மனோபாவமே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த அலட்சயத்தால் பல நேரங்களில் விபரீதங்கள், அசம்பாவிதங்களும் ஏற்பட்டு விடுவதுண்டு.

பிரியாணி
 சாப்பாட்டு பிரியர்களில் பலர் பிரியாணி பிரியர்களாகவும் இருப்பர். சிறுவர், சிறுமியர் முதல் வயதானவர்கள் பிரியாணிக்கென்றே உணவுப்பிரியர்கள் ஏராளம். தலப்பாகட்டி, பாய்வீட்டு பிரியாணி, செட்டிநாடு ஸ்பெஷல் என ஏகப்பட்ட வெரைட்டிகள் உண்டு. அதிலும்   ஹைதராபாத் பிரியாணிக்கென்ற தனி மணமும் சுவையும் பிரியாணி பிரியர்களை சுண்டி இழுக்கும்.  

சிக்கன் ரைஸ்


இந்நிலையில் சமீபத்தில் மணிகொண்டாவில் வசித்து வரும் இளைஞர்  ஸ்விக்கியில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தார்.  பிரியாணியில் சிக்கன் துண்டுகளுடன் நன்கு சமைத்து பொறித்த பிளாஸ்டிக் கவர் கிடந்துள்ளது. இதனைக் கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகைப்படங்களை  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த தகவலால் பிரியாணி பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web