நாளை ப்ளஸ் 2 ரிசல்ட்!! உயர்கல்வி சந்தேகங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!!

 
மாணவிகள்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மே 8ம் தேதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளது. நடப்பாண்டுக்கான  பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் 3,324 தேர்வு மையங்களில்  மார்ச் 13 முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடத்தப்பட்டது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம்  8.65 லட்சம் பேர் வரை  தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 8.17 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். இதில் சுமார் 48,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு தாள்கள் திருத்தும் பணி

இந்நிலையில் நாளை காலை 9 .30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் உயர் கல்வியில் சேருவது குறித்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள 14417 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 வரை மாணவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள்  உயர்கல்விக்கு பாடப்பிரிவுகளை எவ்வாறு தேர்வு செய்வது, கட் ஆப் மதிப்பெண் குழப்பம் இவைகளை தீர்க்கும் வகையில் இந்த உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.  

தேர்வு

இந்த உதவி எண்ணை அழைத்தால் பாட வாரியாக உள்ள வல்லுநர்கள் மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர். மதிப்பெண்களை நினைத்து அச்சம் வேண்டாம் எனவும், மாணவர்களின் குறிக்கோளை நிறைவேற்ற இந்த உயர்கல்வி வழிகாட்டிக் குழு உதவும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த முயற்சிக்கு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web