மணிப்பூரில் அரைநாள் பயணம் முடித்து அஸ்ஸாம் அடைந்த மோடி!

 
மோடி

மணிப்பூர் மாநிலத்தில் இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி மணிப்பூர் சென்றுள்ளார்.  மணிப்பூரின் சுராசந்த்பூரில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கியுமுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டிக்குச் சென்றடைந்தார். குவாஹட்டி லோக்ப்ரியா கோபிநாத் சர்வதேச விமான நிலையத்தில் அஸ்ஸாம் ஆளுநர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, முதல்வர் ஹிமந்தா பிச்வா சர்மா மற்றும் பிற அமைச்சர்கள் அவரை வரவேற்றனர்.

இதற்கடுத்து மணிப்பூா் பயணத்தை முடித்துக் கொண்டு அஸ்ஸாம் சென்றுள்ள பிரதமா் மோடி, நாளை அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளாா். முக்கியமாக புகழ்பெற்ற பாரத ரத்னா பூபேன் ஹஸாரிகாவின் 100-ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அத்துடன் ரூ.19,000 கோடியிலான வளா்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைக்க இருக்கிறார்.

மோடி

இன்று காலை மிஸோரம் மாநிலத்தைச் சென்றடைந்த மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் சுராசந்த்பூருக்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இதனிடையே, கனமழை பெய்ததால் முதலில் அவர், மிஸோரத்திலுருந்து மணிப்பூர் தலைநகர் இம்பால் விமான நிலையத்துக்கு சென்றடைந்தார்.

இம்பால் விமான நிலையத்தை சென்றடைந்த அவருக்கு ஆளுநர் அஜய் குமார் பல்லா, முதன்மைச் செயலர் புனித் குமார் கோயல் ஆகியோர் வரவேற்பளித்தனர். அதன்பின், சாலை மார்க்கமாக மணிப்பூரின் சூரசந்த்பூரைச் சென்றடைந்தார் மோடி. அங்கு மக்களைச் சந்தித்த பின், மீண்டும் இம்பால் திரும்பிய மோடி பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அதன்பின், மாலை அஸ்ஸாம் சென்றடைந்தார்.

மோடி

கடந்த 2023-இல் தொடங்கிய இன மோதல்களுக்குப் பின் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின் மணிப்பூர் சென்ற பிரதமர் மோடி, அங்கு சுமார் 5 மணி நேரத்துக்கும் குறைவாக மட்டுமே இருக்கப்போவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதையடுத்து, பிரதமரின் அரை நாளுக்கும் குறைவான மணிப்பூர் பயணத்தை கடுமையாக விமர்சித்துள்ள கங்கிரஸ், ‘மணிப்பூர் மக்களுக்கு பெருத்த அவமரியாதையாகவே இதைக் கருத முடியும்’ என்று கடுஞ்சொற்களைப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?