வாரணாசியில் பிரதமர் மோடிக்கு கடும் பின்னடைவு... 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை!

 
மோடி ராகுல்

வாராணசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கி இருப்பது அக்கட்சியினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி வாராணசி தொகுதியில் மூன்றாவது முறையாக களமிறங்கி உள்ளார். இவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராஉ வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில் தற்போது முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி உள்ளது. 

இதன்படி காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் 6,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அஜய் ராய் 11,480 வாக்குகளும், பிரதமர் நரேந்திர மோடி 5,257 வாக்குகளும் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, இரு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web