பிரதமர் மோடி ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார்!
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்று வரும் ஆடி திருவாதிரை விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பெருவுடையார் கோயிலில் தரிசனம் செய்தார். அதனையடுத்து மோடி, கோயில் வளாகத்தில் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் @narendramodi மாமன்னன் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார். @PMOIndia @rajbhavan_tn @DrLMurugan @MinOfCultureGoI @ASIGoI @PIB_India pic.twitter.com/2oalLvXmo0
— PIB in Tamil Nadu (@pibchennai) July 27, 2025
பின்னர், தமிழகத்தின் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டார். மாமன்னர் ராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் அவரது உருவம் பொறித்த நினைவு நாணயத்தை வெளியிட்டார். ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தில் ஒ ருபக்கம் ரூ.1,000 மற்றும் அசோக சின்னமும், மறுபுறம் ராஜேந்திர சோழனின் உருவப்படமும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி, ராஜேந்திர சோழனின் கடல் பயணங்கள் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கட்டுமானப் பணியின் 1000வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் இந்தியத் தொல்லியல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசு சார்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், சிதம்பரம் எம்.பி., திருமாவளவன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நினைவு நாணய வெளியீடு, சோழப் பேரரசின் பொற்காலத்தை அடையாளப்படுத்தியது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
