பிரதமர் மோடி செப்டம்பர் 27ம் தேதி ஒடிசா பயணம்!
பிரதமர் மோடி செப்டம்பர் 27 ம் தேதி ஒடிசா பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பெரஹம்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்ற இருப்பதாக மாநில வருவாய் அமைச்சர் சுரேஷ் புஜாரி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் வருகைக்கான இறுதித்திட்டம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்றாலும், அவரது வருகைக்காக அனைத்தும் ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்து, 15 மாதங்களில் மோடி ஒடிசாவிற்கு வருகை தருவது 6வது முறையாகும். செப்டம்பர் 27 ம் தேதி ஒடிசாவிற்கு வருகை தரப் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். பிரதமர் மோடி பாஜகவின் சேவா பக்ஷயா நிகழ்ச்சியில் மோடி கலந்துகொள்வார், அவர் கடைசியாக ஜூன் 20ம் தேதி ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு விழாவில் கலந்துகொள்ள மாநிலத்திற்கு வருகை தந்தார்.

செப்டம்பர் 27 ம் தேதிக்கான பயணத்திட்டத்தை இறுதி செய்யும் தற்காலிக திட்டம் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் 75வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், செப்டம்பர் 17ம் தேதி 75 லட்சம் மரக்கன்றுகளை நட பாஜகவும் மாநில அரசும் திட்டமிட்டு வருகிறது. 'சேவா பக்ஷயா நிகழ்ச்சியில் மாநில பாஜக தொழிலாளர்கள் ரத்த தான முகாம்கள், சுகாதார பரிசோதனைகள், சுகாதார இயக்கங்கள் மற்றும் சமூக உதவித் திட்டங்களை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டு உள்ளனர்” என அமைச்சர் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
