பாமக செளமியா அன்புமணி கைது... தடையை மீறி போராட முயற்சி!

 
சௌமியா
 

இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாமகவினர் செளமியா அன்புமணி தலைமையில் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், நுங்கம்பாக்கம் போலீசார் இன்றைய போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்திருந்தனர்.  இந்நிலையில் தடையை மீறி போராட முயன்றதால் செளமியா அன்புமணி உள்ளிட்ட பாமகவினரை போலீசார் கைதுச் செய்தனர். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் போலீசார் போராட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்த பாமகவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் போலீசார் குவிந்துள்ளனர். பாமகவினர் போராட வந்தால் உடனடியாக கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டிருந்தனர். 

சௌமியா

முன்னதாக சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும், நீதி கோரியும் பாமக மகளிரணி சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் இன்று பாமகவினர் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். 

பாமக மகளிரணி சார்பாக செளமியா அன்புமணி தலைமையில் அறிவிக்கப்பட்ட இன்றைய போராட்டத்திற்கு நுங்கம்பாக்கம் போலீசார் அனுமதி வழங்க மறுத்து இருந்தனர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி

இந்நிலையில் தடையை மீறி இன்று வள்ளுவர் கோட்டத்தில் பாமக போராட்டம் நடைபெறும் என்று பாமக அறிவித்துள்ள நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். 

இந்நிலையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் பாமகவினர் போராட குவிந்தனர். போலீசாரின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற செளமியா அன்புமணி உள்ளிட்ட பாமக கட்சி நிர்வாகிகளைப் போலீசார் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web