“2026ல் பாமகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது...” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!

அருமையான தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் கொடுத்தது, அதை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று சொல்ல வேண்டும்.பட்ஜெட்டில் தமிழகம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. 2004 முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இது குறித்தெல்லாம் சொல்லாமல் தமிழக பாஜக தலைவர் உண்மைக்குப் புறம்பான பல செய்திகளை சொல்லி வருகிறார். அது கண்டிக்கத்தக்கது.
‘பட்ஜெட்டில் தமிழகம் குறித்து சொல்லியிருக்க வேண்டுமானால் எங்களுக்கு 25 எம்பி-க்களை கொடுத்திருக்க வேண்டும்’ என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சொல்கிறார். பிற்போக்குவாதிகள் அப்படித்தான் பேசுவார்கள். 25 எம்பி-க்களை கொடுக்காவிட்டால் தமிழகம் புறக்கணிக்கப்படுமா?. பொதுவாழ்க்கையில் உள்ளவர் பேசும் பேச்சா இது? தமிழக மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுள்ளனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக டெபாசிட்கூட வாங்க முடியாத வகையில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள்” என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!