பிரபல திரைப்பட தயாரிப்பாளர், கவிஞர் பத்மஸ்ரீ பிரித்தீஷ் நந்தி காலமானார்... பிரபலங்கள் இரங்கல்!

 
பிரித்தீஷ் நந்தி
 

பிரபல எழுத்தாளர், கவிஞர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் பிரிதிஷ் நந்தி நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 73. 

இந்திய இலக்கியத்தில் புகழ்பெற்ற நபரான நந்தி 1977ல் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். பிரபல கவிஞர், பத்திரிகையாளர், திரைப்பட தயாரிப்பாளர் என்று தன் ஆளுமையை வெளிப்படுத்தி தனது குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார். 

பிரீத்தீஷ்

1990களில், தூர்தர்ஷனில் தி பிரிதிஷ் நந்தி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ரசிகர்களிடையே அங்கீகாரம் பெற்றார் .

நடிகர் அனுபம் கெர் உட்பட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இரங்கள் செய்திகளை பகிர்ந்து வருகின்றனர். நந்தியுடனான தனது நெருங்கிய நட்பை நினைவுகூர்ந்த கேர், மும்பையின் திரைப்படத் துறையில் தனது ஆரம்ப ஆண்டுகளில் நந்தியை "ஆதரவு அமைப்பு" மற்றும் "பெரிய வலிமையின் ஆதாரம்" என்று விவரித்தார். 

பிரீத்தீஷ்

"கவிஞரும், எழுத்தாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பிரிதிஷ்நந்தி காலமானார். இந்த இக்கட்டான நேரத்தில் அவரது அன்புக்குரியவர்களுக்கு எங்களது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று தனது இரங்கல் செய்தியை ஃபிலிம்பேர் நிறுவனமும் பகிர்ந்துள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!