கவிஞர் சஞ்சீவி காலமானார்! அரசு செய்ய வேண்டியதை ஒற்றை மனிதராய் செய்து வந்தவர்!

 
சஞ்சீவி

கவிஞர் தமிழ் ஒளியின் பெருமையையும், படைப்புகளையும் தன் காலமெல்லாம் பரப்பி வந்த கவிஞர் சஞ்சீவி வயோதிகம் காரணமாக சென்னையில் நேற்று தனது  94வது வயதில் காலமானார். ஒரு அரசு செய்ய வேண்டிய பணியைத் தனி மனிதனாய் தொடர்ந்து தமிழுக்கு தொண்டு செய்வதைப் போன்று செய்து வந்தவர். இவரது மறைவு இன்றைய அரசு அதிகாரிகள், தமிழ் வளர்ச்சித் துறை, ஆட்சியில் இருப்பவர்கள் என யாராலும் கண்டுக்கொள்ளப்படாமலே இருந்து விட்டது. குறைந்த பட்சமாக தமிழ்... தமிழ்.. என்று பேசும் அரசியல் கட்சியினர் இரங்கல் செய்திகளைக் கூட வெளியிட்டு இவரையும், இவரது பணிகளையும் நினைக்கூர வில்லை.

தமிழுக்கு அப்படி என்ன  செய்தார் கவிஞர் சஞ்சீவி?  8ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிப்பாடத்தைப் பயின்ற சஞ்சீவி, சிறு வயதிலேயே தந்தை பெரியாரின் பேச்சால் ஈர்க்கப்பட்டார். அறிவு விசாலமான பின்னர், தமிழின் மீது அதிகளவிலான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். கம்யூனிஸ்ட் தலைவர் கே. எஸ். பார்த்தசாரதி மீதும் தணியா தாகம் கொண்ட சஞ்சீவி, பாரதிதாசன் கவிதைகள் மூலமாக கவிஞர் தமிழ்ஒளியை இனம் கண்டு தமிழின் முதல் தலித் காவியமான வீராயி காவியத்தின் வீரிய கவிதை வரிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

தமிழ் ஒளி
அதன் பின்னர், கவிஞர் தமிழ் ஒளியுடன் தோழமை நட்புடன் பழகி வந்த நிலையில், தமிழ் ஒளியின் அகால மரணம் சஞ்சீவியை பெருமளவில் பாதித்தது.  தமிழ்ஒளியை தொடர்ந்து அவரது கவிதைகளால் வாழ வைப்பது என முடிவெடுத்து, அதன் பின்னர், தொடர்ந்து கவிஞர் தமிழ்ஒளியின் நூல்களைத் தேடித் தேடி பதிப்பித்தார். டாக்டர் மு. வரதராசனார், பன்மொழிப்புலவர் க. அப்பா துரையார் ஆகியோரிடம் நூல்களுக்கு முன்னுரை பெற்று கவிஞரின் புலமையையும் இலக்கிய ஆளுமையையும் வாசகர்களுக்கு தெரியப்படுத்தினார். 

ஒவ்வொரு வருடமும் கவிஞர் தமிழ்ஒளியின் பிறந்த நாள், நினைவு நாள் கூட்டங்களை தமுஎகச, கலை இலக்கிய பெருமன்றம் இவைகளுடன் இணைந்து தொடர்ந்து நடத்தி வந்தார். புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் உதவியுடன் தமிழ்ஒளியின் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த பெருமுயற்சி கொண்டார்.  தமிழ்ஒளி மீதான ஈடுபாட்டை அங்கீகரிக்கும் வகையில் சாகித்ய அகாடமி, கவிஞர் தமிழ் ஒளியின் வரலாற்றை சஞ்சீவியைக் கொண்டு எழுத வைத்து அழகு பார்த்தது. தமிழ்ஒளி நினைவாக சில பதிவுகள் என்ற கட்டுரை தொகுப்பை வெளியிட்டுள்ளார். தமிழ்ஒளி நூற்றாண்டு விழா வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் ஒளியின் புகழைப் பரப்பி வந்த கவிஞர் சஞ்சீவி, அதனைக் காணாது மரணமடைந்தது சோகம் தான். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

தமிழ் ஒளி

இந்நிலையில் அவரது புகழ்ஒளி மங்காமல் காத்துவந்த செ. து. சஞ்சீவி இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சஞ்சீவிக்கு மனைவியும் மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.சஞ்சீவியின் கண்கள் தானமாக வழங்கப் பட்டுள்ளன. சஞ்சீவியின் உடல், எண் 48, பிள்ளையார் கோயில் தெரு, (பச்சையப்பன் கல்லூரி அருகே) செனாய் நகர் சென்னை-30 என்ற முகவரியில் பொதுமக்கள்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இன்று  பிற்பகல் 3 மணிக்கு அவரது உடல் ஊர்வலமாகச் கொண்டு செல்லப்பட்டு நுங்கம்பாக்கம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

From around the web