ஜூன் 21ம் தேதி தளபதியின் “போக்கிரி” ரீரிலீஸ்.... ரசிகர்கள் கொண்டாட்டம்!

 
போக்கிரி

 தமிழ் திரையுலகில் புதுப்படங்களின் பஞ்சத்தால் பழைய படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இளையதளபதி நடிப்பில் வெளியான போக்கிரி படம் தற்போது மீண்டும் ரீலிசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனகரத்னா மூவிஸ் சார்பில் எஸ்.சத்தியராமமூர்த்தி அவர்கள் தயாரிப்பில் நடிகர் மற்றும் இயக்குனர் பிரபுதேவாவின்  இயக்கத்தில் 'தளபதி'விஜய், அசின், வடிவேலு, நாசர், பிரகாஷ்ராஜ், நெப்போலியன், ஆனந்தராஜ், ஸ்ரீமன், வின்சென்ட் அசோகன் உட்பட  முன்னணி நடிகர்கள் நடிப்பில் 2007ல்  ஜனவரி14 பொங்கல் தினத்தன்று வெளியாகிய போக்கிரி திரைப்படம்  பிரம்மாண்ட வெற்றி அடைந்தது அனைவரும் அறிந்ததே.

போக்கிரி
2005ல் வெளியான இவரது முந்தைய திரைப்படமான திருப்பாச்சியின் வசூல் சாதனையை முறியடித்து, அவரது திரை வாழ்வில் ஒரு மைல்கல்லாக அமைந்தது போக்கிரி திரைப்படம் தான்.  போக்கிரி திரைப்படத்தில் காதல், ஆக்க்ஷன், நகைச்சுவை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை என அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்ததனால் படம் மாபெரும் வெற்றி அடைந்தது.படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் தான்.  
இத்திரைப்படம்  'ஷிப்டிங்' எனப்படும் மறுவெளியீட்டில்  வெளியாகி 100நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சமீபகாலமாக மறுவெளியீட்டில் வெளியாகும் திரைப்படங்கள் மாபெரும் வெற்றி அடைந்து வருகின்றன. 'கில்லி' திரைப்படம் மறுவெளியீடாகி வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்து  50 நாட்களை நோக்கி  ஓடிக்கொண்டிருக்கிறது.

விஜய்
இந்த 'கில்லி' மறுவெளியீட்டின் மாபெரும் வெற்றியுடன் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் போக்கிரி திரைப்படம் வெளியாகிறது. ஜூன்-22ம் தேதி 'தளபதி'விஜய்யின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு   'போக்கிரி' திரைப்படம் உலகம் முழுவதும்   ஜூன் 21ம் தேதி மறுவெளியீடாக உள்ளது. இதற்காக  'தளபதி'விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web