விநாயகர் சதுர்த்தி வழிகாட்டுதல்களை பின்பற்ற காவல்துறை அறிவுறுத்தல்!

 
விநாயகர்

தூத்துக்குடி கோவில்பட்டியில்  விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தவறாது கடைப்பிடித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி டிஎஸ்பி ஜகநாதன் அறிவுறுத்தினார்.

கோவில்பட்டியில்  நடைபெற்ற விநாயகர் சிலை அமைப்பாளர்கள், பொறுப்பாளர்களுடன் காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் டிஎஸ்பி ஜகநாதன் தலைமை வகித்து பேசியதாவது: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் அனைத்து விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையம், சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து முறையான முன் அனுமதி பெற வேண்டும். 

விநாயகர் சதுர்த்தி

சென்ற ஆண்டு சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இந்த ஆண்டிலும் வைக்க வேண்டும். தீப்பற்றக்கூடிய பொருள்கள் எதையும், சிலை வைக்கும் இடத்தில் வைக்கக் கூடாது. தீயணைப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவ முதலுதவி உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும்.

விநாயகர்

கடந்த ஆண்டில் அனுமதிக்கப்பட்ட பாதையிலேயே இந்த ஆண்டும் ஊர்வலம் செல்ல வேண்டும். ஜாதி, அரசியல் ரீதியான பாடல்கள், பனியன்கள், கொடிகள், படங்களுக்கு அனுமதி கிடையாது. சட்டம் ஒழுங்கிற்கு பிரச்னை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபடக் கூடாது. விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தவறாது கடைப்பிடித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி டிஎஸ்பி அறிவுறுத்தினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?