திருச்செந்தூரில் கடல் நீர் வெளியேறியதால் பரபரப்பு.. பக்தர்கள் கடலில் குளிக்க திடீர் தடை!

 
கடல் சீற்றம் காரணமாக திருச்செந்தூர் கடலில் குளிக்க போலீசார் தடை

 

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், கோடை விடுமுறை துவங்கியுள்ளதால், பலரும் சுற்றுலா செல்ல மலை வாசஸ்தலங்களிலும், ஆன்மிக இடங்களிலும் குவிந்துள்ளனர். இன்று கூடவே ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இந்நிலையில், வழக்கத்தை விட இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதாலும், கடலிலும் சீற்றம் அதிகம் இருந்ததாலும் மதியத்திற்கு மேல் திருச்செந்தூரில் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதித்து போலீசார் தடுத்து நிறுத்தினர். 

தனுஷ்கோடி கடல் கொந்தளிப்பு அலை

திருச்செந்தூரில், முருகனை தரிசனம் செய்வதற்கு முன்னதாக பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சுவாமியை தரிசிக்க செல்கின்றனர். இந்நிலையில் தமிழக கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பு இருக்கும் என்றும் கடல் அலைகள் 2 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு எழக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. இன்று காலை கடல் வழக்கம்போல் காணப்பட்டதால் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பிற்பகலில் 1 மணி அளவில் கடலில் சீற்றம் ஏற்பட்டு சுமார் 100 அடி தூரம் கடல் நீர் வெளியேறியது. இதனால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web