மெத்தனப் போக்கால் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

 
பணியிடை நீக்கம்

 சென்னை கொருக்குப்பேட்டை காவல் ஆய்வாளர் யுவராஜ்.  தினேஷ் என்பவரது கொலை வழக்கில் அலட்சியமாக செயல்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் யுவராஜ் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து  காவல் ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்   “H-4 கொருக்குப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2 சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் தலைமையிலான இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

பணி இடை நீக்கம்

இருந்தபோதிலும், H-4 கொருக்குப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.R.யுவராஜ் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அதனால் ஜூன் 10ம் தேதி  குற்றவாளிகளின் ஒரு தரப்பைச் சேர்ந்த தினேஷ் என்பவர் கொலை செய்யப்பட்டார்.  யுவராஜின் மெத்தனப் போக்கை கண்டிக்கும் வகையிலும்  மேற்படி நிகழ்வினை தடுக்க தவறிய காரணத்திற்காக, திரு.R.யுவராஜ், காவல் ஆய்வாளர், H-4 கொருக்குப்பேட்டை காவல் நிலையத்திலிருந்து இன்று ஜூன் 11ம் தேதி  "தற்காலிக பணியிடை நீக்கம்"  செய்யப்பட்டுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web