ரயிலில் போலீசார் திடீர் சோதனை... பாத்ரூம் கதவை திறந்தவர்களுக்கு அதிர்ச்சி... அலறிய பயணிகள்!

 
ரயில்

டெல்லியில் இருந்து ராஜ்கிர் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த ஷ்ரம்ஜீவி எக்ஸ்பிரஸ் ரயிலின் பாத்ரூம் கதவைத் திறந்து பார்த்த போலீசார், உள்ளே சடலம் ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இது குறித்த விசாரணையில், நவாடா மாவட்டத்தில் உள்ள ஜங்கிள் பிலாரி கிராமத்தில் வசித்து வந்த 36 வயதான சுனில் சவுகான் என்பவரின் மகன் முசாபிர் சவுகானின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது.

இது குறித்து ஜிஆர்பி ஸ்டேஷன் இன்-சார்ஜ் ஜிதேந்திர குமார் சிங் கூறுகையில், ஷ்ரம்ஜீவி எக்ஸ்பிரஸின் ஜெனரல் கோச்சின் பாத்ரூமில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ரயில் ராஜ்கிர் நிலையத்திற்கு வந்த பிறகு வழக்கமான சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இறந்தவரின் பாக்கெட்டில் கிடைத்த ஆதார் அட்டை அவரை அடையாளம் காண உதவியது.

ரயில்

சம்பவம் குறித்து சுனிலின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பின், உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சுனில் வேலை நிமித்தமாக டெல்லியில் வசித்து வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது மனைவி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார், அவருக்கு ஆறு வயதில் ஒரு மகள் மற்றும் எட்டு வயதில் ஒரு மகன் உள்ளனர். அவர் தனது குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக டெல்லியில் பணிபுரிந்து வந்தார். 

சுனில் எப்போது, ​​எப்படி ஷ்ரம்ஜீவி எக்ஸ்பிரஸில் ஏறினார் என்பது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று கூறி அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். டெல்லியில் இருந்து ராஜ்கிர் வரை பயணம் செய்யும் திட்டத்தை அவர் தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்கவில்லை. அவரது திடீர் மரணச் செய்தி, குடும்பத்தினரையும், கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

அவரது மரணம் தொடர்பான தகவல்கள், அவரது சடலம் எப்படி ரயிலின் பாத்ரூமில் கிடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

From around the web