திருச்சியில் பரபரப்பு... பிரபல ரவுடியை சுட்டுப் பிடித்த போலீசார்!

 
நவீன் குமார்
 

திருச்சி அருகே கொலை வழக்கு தொடர்பாக கைது செய்ய சென்ற இடத்தில், போலீசாரைத் தாக்கி விட்டு தப்பியோட முயன்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டு போலீஸார் பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி வஉசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார் (29). இவரது நண்பரான ராஜா (எ) கலைப்புலி ராஜா என்பவருக்கும், நவீன் குமாருக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கலைப்புலி ராஜா மீது ஏற்கனவே பல்வேறு அடிதடி, கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது. இதனால் அவர் சரித்திர பதிவேடு குற்றவாளியாக, போலீஸாரால் வகைப்படுத்தப்பட்டிருந்தார். 

நவீன் குமார்
இந்த நிலையில் நேற்று முன்தினம் கலைப்புலி ராஜாவின் நண்பர்கள் மது விருந்து நடத்தியுள்ளனர். அதற்காக கட்டாயப்படுத்தி நவீன் குமாரையும் அங்கு அழைத்து வந்து அவருக்கு மது கொடுத்துள்ளனர். பின்னர் நவீன் குமாரை, ராஜாவும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் மூவரும் தப்பிச் சென்ற நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் நவீன் குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீஸார், பாலா, ஸ்ரீநாத் உட்பட இருவரை கைது செய்த நிலையில், கலைப்புலி ராஜா உள்ளிட்ட மற்றவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

லால்குடி


இந்த நிலையில் திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் ராஜா மறைந்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை அவரை கைது செய்வதற்காக போலீஸார் அங்கு சென்று இருந்தனர். போலீஸாரைக் கண்டதும் கலைப்புலி ராஜா அவர்களை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதனால் தற்காப்புக்காக போலீஸார் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் ராஜாவுக்கு காலில் குண்டு பாய்ந்து படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட போலீஸார், திருச்சி அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!