சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... போக்சோவில் போலீஸ்காரர் கைது!

 
போக்சோ

 

திருச்செந்தூரில் உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பூவரசூரைச் சேர்ந்தவர் மிகாவேல்.

பணியிடை நீக்கம்

இவர், சில ஆண்டுகளுக்கு முன் திருச்செந்தூர், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது, இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த 15 நாள்களுக்கு முன்பு மிகாவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பாலியல்

இந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு ஆறுமுகநேரியில் இவர் பணியாற்றிய போது, அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி, திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்தார். அதன்பேரில், மிகாவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து இவரை கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?