பொங்கல் பண்டிகை எதிரொலி... பனை ஓலைகள் வெட்டும் பணி தீவிரம்!
![பனை ஓலை](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/b592c3e86e822558dc163b67aa824606.jpg)
பொங்கல் பண்டிகையை ஒட்டி தூத்துக்குடி அந்தோணியார்புரத்தில் பனை மரத்தில் இருந்து பனை ஓலைகளை வெட்டும் பணி தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பராம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது பல வீடுகளில் பொங்கல் பண்டிகையின் போது கேஸ் அடுப்பில் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கமாகி இருக்கும் சூழலில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும் பலர் தங்கள் வீடுகளின் முற்றத்தில் மண் அடுப்பு வைத்து மண் பானையில் அரிசியிட்டு, பனை ஓலை எரித்து, பொங்கலிட்டும் பாரம்பரிய முறையை கடைப்பிடித்து வழிபாடு செய்து வருகின்றனா்.
இதனை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் பனை மரங்கள் அதிகம் உள்ள அந்தோணியார்புரம் பகுதியில் பனை மரங்களில் இருந்து பனை ஓலைகளை வெட்டும் பணி தொடங்கியுள்ளது. பனை மரத்திலிருந்து வெட்டும் பச்சை ஓலைகள் கீழே விழுந்ததும் அதனை எடுத்து குளத்தின் கரைப்பகுதியில் வெயிலில் காய வைக்கின்றனர். ஓரிரு நாட்களில் ஓலைகள் நன்கு காய்ந்ததும் மொத்தமாக வியாபாரிகளுக்கும் மற்றும் தூத்துக்குடி நகரின் முக்கிய இடங்களில் வைத்து விற்பனை செய்ய தயாராகி வருகிறது.
பனை ஓலையை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பனைத் தொழிலாளி கித்தேரியன் கூறுகையில், "கடந்த ஆண்டு இந்தப் பகுதியில் வெள்ள நீர் தேங்கி இருந்ததால் பனை மரத்தில் ஏறி ஓலை வெட்ட கடினமாக இருந்தது. இந்த ஆண்டு தண்ணீர் இல்லை என்றாலும் குறைந்த அளவு ஓலை தான் வெட்ட முடிந்தது. இன்று வெட்டப்பட்ட ஓலைகள் வெயிலில் ஓரிரு தினங்களில் காய்ந்து விடும். அதன் பிறகு அதனை மிதித்து கட்டி வாகனத்தில் ஏற்றி விற்பனைக்காக எடுத்துச் செல்வார்கள் என்றார்.
இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!