பயணிகள் ஏமாற்றம்... பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிந்தது !

 
பொங்கல்
 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென்மாவட்டங்கள் மற்றும் பிற வெளியூர்களுக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு இன்று (நவ.11) காலை தொடங்கியது. தைப்பொங்கல் விடுமுறைக்கான ஜனவரி 10ஆம் தேதிக்கான டிக்கெட்டுகள், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முழுமையாக விற்றுத் தீர்ந்தன.

பொங்கல்

இணையத்தில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயன்றதால், எழும்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நேரில் வந்த பயணிகள் பலருக்கு முன்பதிவு செய்ய முடியவில்லை. இதனால் ஏராளமானோர் ஏமாற்றமடைந்தனர்.

ரயில் எக்ஸ்பிரஸ்

பாண்டியன், பொதிகை, முத்துநகர் உள்ளிட்ட தென்மாவட்ட ரயில்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. பலர் காத்திருப்போர் பட்டியலில் பதிவு செய்துள்ளனர். பொங்கல் பயணத்திற்கான ஜனவரி 11 முதல் 17 வரை உள்ள தேதிகளுக்கான முன்பதிவு நவம்பர் 12 முதல் 18 வரை தொடரும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!