செம!! டி20 டிராபிக்கு திருப்பதி கோவிலில் சிறப்பு பூஜை!!

 
ஐபிஎல்

ஐபிஎல்  டி20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டது. இதில் இறுதிப் போட்டியில் குஜராத்தும் சென்னை அணியும் மோதின. மழையால் ஆட்டம் ஒரு நாள் ஒத்தி போடப்பட்டது . ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்த நிலையில் கடைசி பந்து வரை விறுவிறுப்பாக நடைபெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. ஐபில் கிரிக்கெட் திருவிழா மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டி 3 நாட்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 
இதில் முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது.


பின்னர் கடின இலக்கின் அடிப்படையில் விளையாட்டை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மழை குறுக்கீடு காரணமாக 15 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. இதனால்  சிஎஸ்கேயின் வெற்றிக்கு 171 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.இதையடுத்து டெவான் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், ரஹானே, அம்பத்தி ராயுடு ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியாக ஜடேஜா வந்து கடைசி ஓவரில் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து அணியை வெற்றிக்கு வித்திட்டார். இந்த வெற்றியின் மூலமாக சிஎஸ்கே அணி 5வது முறையாக டைட்டில் வென்றுள்ளது.

ஐபிஎல்


இந்நிலையில், வெற்றி பெற்ற கையோடு சென்னை வந்த சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் அண்ட் டீம், ஐபிஎல் டிராபியை துணியால்  மறைத்து  சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபென் ஃப்ளெமிங்  தியாகராயர் நகரில் அமைந்துள்ள  திருப்பதி ஏழுமலை வெங்கடாஜலபதி கோயிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்துள்ளனர்.இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web