குண்டும் குழியுமாக மோசமான பராமரிப்பு... சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க உயர்நீதிமன்றம் தடை!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 544 சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடி அமைந்துள்ள நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இதன் பேரில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து இதனை பராமரிக்கும் பணிகளில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இது குறித்து தொடரப்பட்ட பொது நல வழக்கில் நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை, போக்குவரத்து நெருக்கடியை சரிசெய்யும் வரை பளியக்கரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என கேரள உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 6ம் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி முதலில் 4 வாரங்களுக்கு சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக பளியக்கரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இது குறித்த மேல்முறையீட்டு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலைகளை சரிசெய்த பிறகே கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படும் என உச்சநீதிமன்றமும் கூறிவிட்டது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
