அதிர்ச்சி... பிரபல சின்னத்திரை நடிகை திடீர் மரணம்!
Jun 6, 2024, 15:27 IST

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகை விஜயகுமாரி புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். நடிகை விஜயகுமாரியின் திடீர் மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீரியல்களில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.
கடந்த மூன்று வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்தார் துணை நடிகை விஜயகுமாரி. நடிப்பின் மீதான ஆர்வத்தில் ஈரோட்டில் இருந்து சென்னைக்கு வந்தவர், வளசரவாக்கத்தில் தங்கியிருந்து துணை நடிகையாக பெரிய திரையிலும் சீரியல்களிலும் நடித்து வந்தார். இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது 3வது கட்டத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மூன்று வருடங்களாக இதற்காக சிகிச்சை எடுத்து வந்தார்.
ஆனால், சிகிச்சை பலனில்லாத நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
From
around the
web