பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்... திரைத்துறையினர் இரங்கல்!

 
கோபி

 தமிழ் திரையுலகில் மைக்கேல் மதன காமராஜன் திரைப்படம்  1990ல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான  இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஊர்வசி, குஷ்பூ, நாகேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைப்பில் உருவான இப்படத்தில்  வரது குட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் குள்ள கோபி.

இவர்  கிரேஸி கிரியேஷன்ஸின் ஆஸ்தான நடிகர்.  குள்ள  கோபி என்ற ஸ்ரீ கோபிநாத ராவ் நேற்று  மாலை 04.30 மணிக்கு காலமானார். நீண்ட காலமாக  உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று  திருவான்மியூர் காமராஜ் நகர் 8/1 8வது கிழக்கு அவரது இல்லத்தில் நடைபெற்றது.  நடிகர் ஸ்ரீ கோபிநாத்ராவ் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web