பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் கைது... ரசிகர்கள் அதிர்ச்சி!

 
வேல்முருகன்
 

குடிபோதையில் மெட்ரோ ரயில் திட்ட உதவி மேலாளரை தாக்கியது தொடர்பான புகாரில் பிரபல பின்னணி பாடகர் வேல்முருகனை இன்று போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே குடிபோதையில், சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பாடகர் வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், நேற்று மீண்டும் புதிய சர்ச்சையில் சிக்கினார் வேல்முருகன். 

வேல்முருகன்
சென்னை, வளசரவாக்கம் -ஆற்காடு சாலையில் மெட்ரோ பணிகள் நடந்து வருவதன் காரணமாக தற்காலிகமாக அங்கு தடுப்பு வைத்து ஒரு வழிப்பாதையாக மாற்றி இருக்கின்றனர் மெட்ரோ ஊழியர்கள். அந்த வழியாக காரில் சென்ற வேல்முருகன் ’எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி எப்படி இப்படி செய்யலாம்?’ என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுப்பை மீறி செல்ல முயன்றிருக்கிறார். 

வேல்முருகன்


இந்த பிரச்சினையை சரிசெய்ய வந்த மெட்ரோ ரயில் திட்ட உதவி மேலாளர் வடிவேலு என்பவரையும் ஆத்திரத்தில் தாக்கியுள்ளார். இதனால், காயமடைந்த வடிவேலு இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல்துறையில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார். 
இதுகுறித்து, விசாரித்த காவல்துறையினர் இன்று அதிரடியாக பாடகர் வேல்முருகனை கைது செய்திருக்கின்றனர். இந்த விஷயம் திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web