பிரபல பாடகர் விபத்தில் பலி... திரையுலகில் பெரும் சோகம்!
பிரபல அஸ்ஸாம் பாடகர் ஸுபீன் கார்க் சிங்கப்பூரில் விபத்தில் சிக்கி பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. திரையுலகில் முன்னணி பாடகராகத் திகழ்ந்தவர் ஸுபீன் கார்க் அசாமீஸ். இவருக்கு வயது 52. ஹிந்தி மற்றும் வங்காளம் ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை இவர் பாடியுள்ளார்.
শব্দ আজি নিজেই নিজত আবদ্ধ
— Himanta Biswa Sarma (@himantabiswa) September 19, 2025
Today Assam lost one of its favourite sons. I am in a loss of words to describe what Zubeen meant for Assam. He has gone too early, this was not an age to go.
Zubeen's voice had an unmatched ability to energise people and his music spoke directly to…
”யா அலி” எனும் இவரது பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சிங்கப்பூரில் நடைபெறும் நார்த் ஈஸ்ட் (வடகிழக்கு) திருவிழாவில் பாடுவதற்காக, ஸுபின் கார்க் சென்றிருந்தார். அங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் சென்ற அவர், நேற்று செப்டம்பர் 18ம் தேதி இரவு ஆழ்கடல் சாகசத்தில் (ஸ்கூபா டைவிங்) ஈடுபட்டிருந்தார். திடீரென விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ஸுபினை, சிங்கப்பூர் காவல் துறையின் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் பாராகிளைடிங் எனும் சாகச விளையாட்டில் ஈடுபட்டபோது கடலில் விழுந்து படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஸுபீன் சிகிச்சை பலனின்றி பலியானார். பாடகர் ஸுபீன் கார்கின் திடீர் மரணம் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திரையுலகினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் தலைவர்களும் ஸுபினின் குடும்பத்துக்கு தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
