பிரபல தெலுங்கு திரைப்பட இசையமைப்பாளர் காலமானார்! பிரபலங்கள் இரங்கல்!

பிரபல தெலுங்கு திரைப்பட இசையமைப்பாளர் ராஜ் இன்று காலமானார். தோடகுரா சோமராஜூ என்ற இயற்பெயர் கொண்ட இசையமைப்பாளர் ராஜ், கோடி என்ற இசையமைப்பாளருடன் சேர்ந்து பல திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் பிரபல இசையமைப்பாளர் டி.வி.ராஜூவின் மகன்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் குழுவில் இணைந்து சில வருடங்கள் பணிபுரிந்துள்ள இசையமைப்பாளர் ராஜ், இசையமைப்பாளார் கோடியுடன் சேர்ந்து 180 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.
Ace music director #Raj garu passed away. May his soul rest in peace! 🙏#RIPRajGaru #OmShanti #TeluguFilmNagar pic.twitter.com/3ulRC8M9et
— Telugu FilmNagar (@telugufilmnagar) May 21, 2023
இவரது இசையில் உருவான 3000க்கும் மேற்பட்ட பாடல்களில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட பாடல்களை எஸ்.பி.பியும், சித்ராவும் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜூ, கோடி இணைந்து இசையமைத்து தெலுங்கில் வெளியான ஹலோ பிரதர் படத்திற்கு ஆந்திர அரசின் உயரிய விருதான நந்தி விருது கிடைத்துள்ளது. இசையமைப்பாளர் ராஜூவின் மரணம் தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!