பிரபல யூடியூபர் வெள்ளத்தில் சிக்கி மரணம்... ரீல்ஸ் மோகத்தால் சோகம்!

 
மரணம்

ஒடிசா மாநிலம், பெர்ஹாம்பூரில் வசித்து வருபவர் பிரால யூடியூபர் சாகர் டுடு (22), தனது நண்பர் அபிஜித் பெஹராவுடன் கட்டாக்கிலிருந்து கோராபுட் மாவட்டத்திற்கு சுற்றுலாத் தலங்களைப் பற்றி தனது யூடியூப் சேனலுக்காக வீடியோ எடுத்தார்.  லாம்டாபுட் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, மச்சகுண்டா அணையில் இருந்து சுமார் 2,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இது குறித்து கரையோர மக்களுக்கு  எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் துடுமா நீர்வீழ்ச்சியில் ட்ரோன் கேமராவைப் பயன்படுத்தி யூடியூபர் சாகர் ரீல்ஸ் பதிவு செய்துகொண்டிருந்தார். அந்த சமயத்தில்  திடீரென அணையில் இருந்து நீர்வரத்து அதிகரித்ததால், சாகர் நீர்வீழ்ச்சியின் நடுவே இருந்த பாறையில் சிக்கிக்கொண்டார்.

மர

உடனடியாக அங்கிருந்த உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கயிறுகளை வீசி அவரைக் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அதிவேகமாகப் பாய்ந்த வெள்ளம் அவரை அடித்துச் சென்றது. தகவல் அறிந்ததும்  போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாகரின் உடலை தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?