ஆம்ஸ்ட்ராங் 20 வயது குறைந்த பெண்ணுடன் திருமணம்... இது தான் காரணம்!

 
ஆம்ஸ்ட்ராங்


தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆம்ஸ்ட்ராங்பட்டியலின மக்களுக்காகத் தொடர்ந்து போராடி வந்தார்.  அக்கட்சியின் தேசியத் தலைவரான மாயாவதியின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தார். தலித் சமூகத்தினரின் உரிமைக்காக பொது வாழ்க்கையில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங்  தன் உயிருக்கு ஆபத்து வரலாம் என்பதையும் உணர்ந்தே இருந்தார்.  அவர் தன்னுடைய பாதுகாப்புக்காக  எப்போதுமே தேசிய உரிமம் பெற்ற இத்தாலிய துப்பாக்கி ஒன்றையும்  தன் கைவசம் வைத்திருந்ததும் நெருங்கிய நண்பர்களுக்கு தெரியும்.  

ஆம்ஸ்ட்ராங்


திருமணம் செய்துகொண்டால் தன்னுடைய தீவிர அரசியல் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் என நினைத்து  திருமணமே செய்துகொள்ள வேண்டாம் என்ற முடிவில் இருந்தார். தந்தை கிருஷ்ணனும் தாய் லில்லியும் எவ்வளவோ வற்புறுத்தினர். அவர் திருமணம் செய்ய சம்மதிக்கவே இல்லை.  
இந்நிலையில் தான் ஆம்ஸ்ட்ராங்கை விட 20 வயது இளையவரான பொற்கொடியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருநாவுக்கரசு - விஜயலட்சுமி தம்பதிக்கு மூத்த மகளாகப் பிறந்த   சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக செயல்பட்டு வந்தார்.  அம்பேத்கர் மீது கொண்ட பற்றினால்  பொற்கொடியும் பௌத்த மதத்தைத் தழுவினார். பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டின் அருகிலேயே உருவாக்கி இருந்த புத்த விகாருக்கு பொற்கொடியும் அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த சமயத்தில்  இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு  ஆம்ஸ்ட்ராங்கின் சமூகச் செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்தார்.  ஆம்ஸ்ட்ராங்க் பௌத்த பண்பாட்டில் கொண்ட ஈடுபாடும் பொற்கொடியை மிகவும் கவர்ந்தது. ஒரு கட்டத்தில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார்.

ஆம்ஸ்ட்ராங்

 தனது தந்தை திருநாவுக்கரசர் மூலம் ஆம்ஸ்ட்ராங்கிடம் பேசி திருமணத்துக்கு சம்மதம் வாங்கிவிட்டார்.  தனது 44 வயதில் ஆம்ஸ்ட்ராங் திருமணம் செய்து கொண்டார்.  2016ல்  ஆம்ஸ்ட்ராங் - பொற்கொடி இருவருக்கும் பௌத்த மத வழக்கப்படி திருமணம் நடைபெற்றது. சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித சார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் திருமாவளவன், பூவை. ஜெகன்மூர்த்தி உட்பட பலர்  கலந்துகொண்டனர்.
இனிய இல்லறத்தின் பயனாக  பெண் குழந்தை பிறந்தது. பெங்களூரில் நடைபெற்ற புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இந்த குழந்தைக்கு சாவித்திரி பாய் என பெயர் சூட்டினார். அம்பேத்கரின் அரசியல் குருவான சாவித்திரி பாய் பூலேயின் பெயர் வைக்கப்பட்டதில் தம்பதியர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களது மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை என்பதே பெரும் சோகமாக முடிந்தது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web