தமிழிசை ZOOM மீட்டிங்கில் ஆபாசப் படம் ... அதிர்ச்சி வீடியோ!

 
தமிழிசை

  தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது.அனைத்துஅரசியல் கட்சிகளும் தீவிரமாக இறுதிக் கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தென் சென்னை வேட்பாளரான தமிழிசை சௌந்திரராஜன் இன்று ஜூம் மீட்டிங்க் மூலம் மக்களிடையே வாக்குசேகரித்தார். இது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்   ''இன்று Zoom மீட்டிங்கில் மக்களுடன் உரையாடி கொண்டிருக்கும்போது சில விஷமிகள் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டனர். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆபாசமான படங்களை Zoom மீட்டிங்கில் பரவவிட்டு உடனே நான் அவர்களோடு பேசுவதை தடுத்துவிட்டார்கள்'' என தெரிவித்துள்ளார்.


 


தமிழிசை சவுந்தராஜன் ஜூம் மீட்டிங்கில்   “வணக்கம், முதலில் அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். நான் உங்களுடன் Zoom மீட்டிங் மூலம் தொடர்பு கொள்ள முடிவு செய்தேன். தென்சென்னை தொகுதியில் அனைத்து இடங்களுக்கும் சென்று ஒவ்வொருவரையும் சந்தித்து வருகிறேன். ஆனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வரும் எனது பொதுமக்களை என்னால் நேரடியாக சந்திக்க முடியவில்லை. இதனால் நான் உங்களுடன் Zoom மீட்டிங் மூலம் தொடர்பு கொள்கிறேன்.  அதன்படியே Zoom மீட்டிங்கில் உங்களுடன்  இணைந்துள்ளேன். தாமரை சின்னத்தில் ஓட்டளித்து எம்பியாக என்னை தேர்வு செய்ய வேண்டும் . துரதிர்ஷ்டவசமாக அந்த மீட்டிங்கை முன்னெடுத்து செல்ல முடியவில்லை.

தனி விமானம் மூலம் `ரெம்டெசிவிர்’ மருந்தை கொண்டு வந்த தமிழிசை !
சில விஷமிகள், எதிரிகள் தலையிட்டு உங்களையும், என்னையும் தொடர்பு கொள்ள முடியாத வகையில் தவறான செயலில் ஈடுபட்டனர்.  இது நமக்கு இடையே இருக்கும் உணர்வுப்பூர்வமான உறவை பிரிக்காது. நன்கு படித்த, நேர்மையான நபர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அப்போது தான் அரசியல் என்பது சுத்தமாகும்.இதனால் தயவுசெய்து தாமரை சின்னத்தில் எனக்கு வாக்களியுங்கள். இன்னொரு நேரத்தில் விஷமிகள் தலையீடு இன்றி நாம் மீட்டிங்கை கனெக்ட் செய்வோம்.
அதன்மூலம் நாட்டின் முன்னேற்றத்துக்கும், தென்சென்னையின் வளர்ச்சிக்கும் ஒன்றாக இணைவோம். உங்களின் சின்னம் தாமரை. லோக்சபா தேர்தலில் தாமரை சின்னத்தில் வாக்களித்து எனக்கு ஆதரவு தாருங்கள் என பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.  

 தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

திடீர் ராஜயோகத்தால் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது!

From around the web