லீக்கான ஆபாச வீடியோக்கள்.. 300 பெண்களுடன் உல்லாசமாம்.. நாட்டை விட்டு எஸ்கேப்பான தேவகவுடா பேரன்!

 
 பிரஜ்வல் ரேவண்ணா

கர்நாடகாவில் ஒக்கலிகா கவுடா சாதி வாக்குகளை மட்டுமே நம்பியிருக்கும் கட்சி மதச்சார்பற்ற ஜனதா தளம் - ஜேடிஎஸ். முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தின் கட்சி. தேவகவுடா மகன்கள் ரேவண்ணா, குமாரசாமியைத் தொடர்ந்து தேவகவுடா பேரன்கள் நிகில் குமாரசாமி, பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோரும் அரசியலில் உள்ளனர். லோக்சபா தேர்தலில், குமாரசாமி மாண்டியா தொகுதியிலும், பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியிலும் போட்டியிட்டனர். கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரசுடன் ஜேடிஎஸ் கூட்டணி அமைத்தது.

இம்முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் ஒக்கலிக கவுடா சாதி ஓட்டுகளை காங்கிரசுக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார். இதன் காரணமாக ஜேடிஎஸ் கட்சி பெரும் தோல்வியில் தத்தளிக்கிறது. இந்த நிலையில்தான் தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ சர்ச்சை கர்நாடகாவை உலுக்கி வருகிறது. 300க்கும் மேற்பட்ட பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் ஹாசன் தொகுதி முழுவதும் தீயாக பரவி வருகிறது. மேலும் ஹாசன் தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26ஆம் தேதி முதல் இந்த வீடியோக்கள் வாட்ஸ்அப்பில் தொகுதி முழுவதும் வலம் வருகின்றன.

அப்படிப்பட்டவருக்கு வாக்களிக்கப் போகிறீர்களா? 300க்கும் மேற்பட்ட பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா உல்லாசமாக இருக்கும் அநாகரீகமான வீடியோக்கள் வெளியாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஒட்டு மொத்த தேவகவுடா குடும்பமே நிலைகுலைந்து போனது. இது தொடர்பாக ஜேடிஎஸ் கட்சியின் தேர்தல் முகவர் பூர்ணசந்திர தேஜஸ்வி போலீசில் புகார் அளித்தார். அதில் நவீன் கவுடா என்பவர் தான் இதுபோன்ற ஆபாச வீடியோக்களை அனுப்புகிறார். இந்த வீடியோக்கள் அனைத்தும் போலியானவை. ரேவண்ணாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இதுபோன்ற போலியான ஆபாச வீடியோக்களை பரப்புகிறார்கள் என்று பிரஜ்வல் கூறியிருந்தார்.

 

பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக எஸ்ஐடி விசாரணைக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் முடிவடைந்துள்ளது. வட கர்நாடகாவில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இந்த ஆபாச வீடியோ விவகாரம் வட கர்நாடக மக்களவைத் தேர்தலில் மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாக தேவகவுடா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், ஆபாச வீடியோக்கள் வெளியானதும் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறினார் பிரஜ்வல் ரேவண்ணா. பெங்களூரில் இருந்து ஜெர்மனிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web