போட்றா வெடிய... ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் இயக்குனர் மணிரத்னம்!

 
மணிரத்னம்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது நிஜமாகவே கொண்டாட்டமான செய்தி தான். இது வரை எட்டாத கனியாக இருந்து வந்த ஆஸ்கர் விருதுகளை சாத்தியப்படுத்தியிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். ஒன்றுக்கு இரண்டாக இரு கைகளிலும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வெச்சிருந்தப்படியே அவர் போட்ட ஆரம்பம் அடுத்தடுத்து ஆஸ்கர் விருதுகள் இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க துவங்கின. அதன் பின்னர் ராஜமெளலி, ராம் சரண் என்று ஒவ்வொரு வருஷமும் ஆஸ்கர் விருதுகளில் இந்தியர்களின் பெயர்கள் உச்சரிக்க துவங்கி உள்ளன.

இந்நிலையில், 2023ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் இயக்குனர் மணிரத்னம் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த குழுவில் நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், இசையமைப்பாளர் கீரவாணி ஆகிய இந்திய கலைஞர்களும் இடம் பெற்றுள்ளார்.
naatu naatu
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும், உள்ள அனைத்து வகையான சினிமாக்களையும், அனைத்து கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக, சினிமாவில் உள்ள அனைத்து துறைகளையும் சேர்ந்த கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படும் உயரிய விருது ஆஸ்கர் விருது.

கடந்த ஆண்டு 'நாட்டு நாட்டு' என்ற பாடலுக்கும், 'தி எலிஃபென்ட் விஸ்பரர்' என்ற ஆவணப்படத்திற்கும் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் உலக அளவில் இருந்து 398 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
m m keeravani
அதில், இந்தியாவை சேர்ந்த இயக்குனர் மணிரத்னம், நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே இந்த குழுவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், மற்றும் நடிகர் சூர்யா ஆகிய இருவரும் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web