இந்த மாவட்டத்தில காலை முதல் மாலை வரை பவர் கட்... செக் பண்ணிக்கோங்க!
![மின் தடை](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded_original/4cfd7997dffa5bf4573808ea243291fe.webp)
தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சிவகங்கை மாவட்டத்தில் மின் தடை செய்யப்பட இருப்பதாகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் தமிழக மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து சிவகங்கை கூட்டு மின் தொகுப்பு துணை மின் நிலையத்தில் இன்று ஜனவரி 11ம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனையடுத்து சிவகங்கை நகா், சுற்றிவட்டார கிராமங்களான முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், காமராஜா் குடியிருப்பு, பையூா், வந்தவாசி, கூத்தாண்டன், வாணியங்குடி, கீழக்கண்டணி, சுந்தரநடப்பு, சோழபுரம், சூரக்குளம் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!