பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்... இயக்குநர் ராஜமௌலி பேட்டி!

 
பிரபாஸ்
 

பிரபாஸ் நடித்த கல்கி 2898 கிபி  திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வெற்றி பெற்றுள்ளது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, ஷோபனா, திஷா பதானி ஆகியோரும் நடித்துள்ளனர். கல்கி படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரசிகர்களிடையே ஹாட் டாபிக் ஆகியிருக்கிறார் நடிகர் பிரபாஸ். 

பிரபாஸ்

44 வயதான நடிகர் பிரபாஸ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். திருமணத்தைப் பற்றி எப்போது கேட்டாலும் அவர் ஒதுங்கிக் கொள்கிறார்.தற்போது, ​​நடிகர் பிரபாஸ் ஏன் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என இயக்குனர் ராஜமௌலி கூறியது வைரலாகி வருகிறது. நடிகர் பிரபாஸ் மிகவும் சோம்பேறி என்று கூறிய ராஜமௌலி, அவரது சோம்பேறித்தனத்தால் தான் நடிகர் பிரபாஸ் இதுவரை திருமணம் கூட செய்து கொள்ளவில்லை என்று கூறினார். ஒரு பெண்ணைக் கண்டுபிடித்து அவளது பெற்றோரிடம் பேசுவது பிரபாஸுக்கு பெரிய பணி என்று ராஜமௌலி குறிப்பிட்டுள்ளார்.

பிரபாஸ்

இதை பிரபாஸும் ஒரு பேட்டியில் ஒப்புக் கொண்டார், தான் சோம்பேறியாகவும், புதியவர்களை சந்திக்க தயங்குவதாகவும் கூறியுள்ளார். அப்போது, ​​பிரபாஸ், சினிமா துறையில் எப்படி நுழைந்தார் என்று சில சமயங்களில் யோசிப்பதாக இயக்குநர் ராஜமெளலி குறிப்பிட்டார். பிரபாஸ் திருமணம் செய்து கொள்வார் என அவரது குடும்பத்தினர் முன்பே கூறியிருந்தனர். ஆனால் பிரபாஸ் இன்னும் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. நடிகை அனுஷ்கா ஷெட்டியை பிரபாஸ் காதலிப்பதாக வதந்திகள் வந்தன. ஆனால் இந்த வதந்திகளுக்கு இருவரும் இதுவரை எந்த பதிலையும் சொல்லாமல், மறுப்பும் தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web