ரசிகர்கள் குஷி... 27 வருஷ இடைவெளிக்குப்பின் இணையும் பிரபுதேவா - கஜோல் ஜோடி... எகிறும் எதிர்பார்ப்பு!
மியூஸிக்கலி ஹிட் என்று மின்சார கனவு படத்தை ஒற்றை வார்த்தையில் கடந்து செல்ல முடியாது. கஜோலின் துருதுரு நடிப்பு, பிரபுதேவாவின் நடனம், மழைத்துளி போல் துல்லியமான ஒளிப்பதிவு, இசை என ரசிகர்களின் ஃபீல் குட் படமாக மனசில் இன்றும் நிற்கிறது ‘மின்சாரக்கனவு’.

இந்நிலையில் 27 வருடங்கள் கழித்து கஜோலுடன் மீண்டும் ஜோடி சேர்கிறார் பிரபுதேவா. ‘மின்சார கனவு’ படத்தில் ரஹ்மான் இசையில் ‘வெண்ணிலவே...வெண்ணிலவே’ பாடலுக்கு இருவரும் நடனமாடியது இப்போதைய 2கே கிட்ஸ் வரையிலும் ஹிட்தான்.

தெலுங்கு இயக்குநர் சரண் தேஜ் உப்பலபதி பாலிவுட்டில் அதிரடி இயக்கும் புதிய படத்தில் பிரபுதேவா - கஜோல் இணைகின்றனர். இவர்களைத் தவிர நஸ்ருதீன் ஷா, சம்யுக்தா மேனன், ஆதித்யா ஷீல் உள்ளிட்டப் பலரும் நடிக்கின்றனர். படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார்.
படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டீசர் மற்றும் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
