கடவுள் கொடுத்த வரம் கெனிஷா... ரவி மோகன் புகழாரம்!

 
கெனிஷா

 
 
நடிகர் ரவி மோகன் இன்று ஆகஸ்ட் 26ம் தேதி செவ்வாய்க்கிழமை ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதற்கான அறிமுக விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில்   ரவி மோகனின் தோழி கெனிஷா, நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவராஜ் குமார், எஸ்ஜே சூர்யா, பிரபல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.

கெனிஷா
ரவி மோகனும், கெனிஷாவும்  தயாரிப்பு நிறுவனம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இருவரும் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில் பேசிய ரவி மோகன், "இந்த நிகழ்வு நடக்க ஒரே காரணம் கெனிஷாதான். இவ்வளவு பேர் வருவார்கள் எனத் தெரியாது. நான் யாரென எனக்கு உணர வைத்தவர்.

ரவி கெனிஷா

எனக்குக் கடவுள் கொடுத்த வரம் கெனிஷா. இவரைப் போன்ற ஒருவர் அனைவரின் வாழ்விலும் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்." என பேசியுள்ளார் .  ரவி மோகன் புதிதாக தொடங்கிய  தயாரிப்பு நிறுவனத்தில் கெனிஷாவும் பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?